• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாநகரில் 154.46 கோடி மதிப்பீட்டில் 75 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளது - மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!

  • Share on

தூத்துக்குடி மாநகரில் 154.46 கோடி மதிப்பீட்டில் பல பகுதிகளில் 75% மற்றும் சில பகுதிகளில் 100% சாலை பணிகளும் நிறைவடைந்துள்ளன மேலும் இது போல பல பகுதிகளில் வடிகால் பணிகளும் நிறைவடைந்துள்ளது என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் ஊராட்சி பகுதிகளில்  நடைபெறும் கிராம மாநகரிலும் பகுதி சபா உறுப்பினர்களை கொண்டு பகுதி சபா கூட்டங்களை நடத்தும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டு அதன்படி பகுதி சபா கூட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளை சார்ந்த வார்டு சபா உறுப்பினர்களை சந்தித்து அவர்கள் பகுதியில் நடைபெற்று முடிந்த பணிகள் மற்றும் நடைபெற வேண்டிய பணிகள் குறித்து மேயர் ஜெகன் பெரியசாமி போல்பேட்டையில் வைத்து கலந்தாலோசனை நடத்தி வருகிறார்.


அப்போது, தூத்துக்குடி மாநகரில் 154.46 கோடி மதிப்பீட்டில் பல பகுதிகளில் 75 சதவீதம் மற்றும் சில பகுதிகளில் 100 சதவீதம் சாலை பணிகளும் நிறைவடைந்துள்ளன. மேலும் இது போல பல பகுதிகளில் வடிகால் பணிகளும் நிறைவடைந்துள்ளன. இது போன்ற நிகழ்வுகளால் மக்களின் மனநிலையை உங்கள் மூலமாக தெரிந்து கொள்ளவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கரங்களை வலுப்படுத்தவும் முடியும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர்கள், மண்டல தலைவர்கள், வட்ட செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி சிப்காட்டில் 67 நிறுவனங்கள் இயங்கி வரும் நிலையில், அவற்றில் 27 நிறுவனங்கள் ரெட் கேட்டகிரியில் உள்ளது - உச்ச நீதி மன்றத்தில் வேதாந்தா தரப்பு வாதம்

பணம் சம்பாதிக்க விரும்பும் பெண்களா நீங்கள்? உங்களுக்கு தான் இந்த வாய்ப்பு - மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தகவல்!

  • Share on