• vilasalnews@gmail.com

மாப்பிள்ளையூரணி ஊராட்சியை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைப்பது ஏன்? அமைச்சர் விளக்கம்!

  • Share on

தமிழகத்தில் மாநகராட்சி பகுதிகளுக்கு அருகில் உள்ள ஊராட்சிகளை இணைக்காமல் இருக்க முடியாது என்றும், மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைப்பது குறித்து கமிட்டி அமைக்கப்பட்டிருக்கிறது என்றும் சட்டசபையில் அமைச்சர்கள் தெரிவித்தார்கள்.

தமிழகத்தில் சென்னை மற்றும் தாம்பரம் பகுதியை தவிர மற்ற பகுதிகளில் உள்ள பெரும்பாலான ஊராட்சிளை அருகில் உள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சியில் இணைக்க எதிர்ப்பு அதிகமாகவும், ஆதரவு குறைவாகவும் உள்ளது. வீடு, குடிநீர் உள்ளிட்ட வரி உயர்வு, வேலை உறுதி திட்ட பயனாளிகளுக்கு வேலைவாய்ப்பு பிரச்னை ஏற்படும். மத்திய அரசின் ஊராட்சி நிதி கிடைக்காது என்று அச்சப்பட்டு நகரங்களுடன் ஊராட்சியை இணைக்க மறுக்கிறார்கள். இந்த பிரச்சனை தொடர்பாக சட்டசபையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. நேற்று சட்டசபை விவாதத்தின் போது பேசிய கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. எம்எல்ஏ தளவாய் சுந்தரம், தனது தொகுதியில் 25 ஊராட்சிகளை பேரூராட்சியுடன் இணைக்க இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் ஊராட்சிகளை பேரூராட்சியுடன் இணைக்க வேண்டாம் என்பதில் பொதுமக்கள் உறுதியாக உள்ளார்கள். இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை அறிய விரும்புகிறேன் என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, பொதுவாக ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகளை மாநகராட்சிகளுடன் இணைப்பதற்கு கடந்த காலங்களில் தீர்மானங்கள் போடப்பட்டு தமிழகு அரசுக்கு வந்திருக்கிறது. அப்படி வரும் தீர்மானங்கள் குறித்து முடிவெடுக்க கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த கமிட்டிதான் ஊராட்சிகளை இணைப்பது குறித்து முடிவு செய்யும். அந்த கமிட்டியிடம் உங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்றார்.

பெரியசாமியை தொடர்ந்து, துறையின் அமைச்சரான நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்து பேசுகையில், ஊராட்சிகளை இணைக்காமல் இருக்க இயலாது. அமைச்சர் பெரியசாமி அதற்கு தகுந்த பதிலை கூறியிருக்கிறார். மாநகராட்சி, நகராட்சிக்கு அருகில் இருக்கிற ஊராட்சிகளை இணைக்கலாம் என்று அந்தந்த தலைவர்கள் தீர்மானம் போட்டுதான் அனுப்பி உள்ளார்கள். துறை சார்ந்த செயலாளர்கள் தலைமையில் இதற்காக கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

கிராமங்களை சேர்ந்தவர்கள் 100 நாள் வேலை திட்டத்தால் இணைக்க விரும்பாமல் இருக்கிறார்கள். உதாரணமாக துாத்துக்குடி மாநகராட்சி அருகில் உள்ள மாப்பிள்ளையூரணி ஊராட்சியில், 40,000 மக்கள் இருக்கிறார்கள். அந்த ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைப்பதை தவிர, வேறு வழியில்லை. அந்த ஊர் மக்கள் நுாறு நாள் வேலை திட்டம் இருக்காது என்பதால், இணைக்க ஒப்புதல் தர மறுக்கின்றனர். ஆனால் மக்களின் அடிப்படை விஷயங்களை நிறைவேற்ற இந்த இணைப்பு அவசியமாகிறது. மாநகர பகுதிகளுக்கு கிடைக்கும் வசதிகள், அருகில் இருக்கும் பகுதி ஊராட்சியாக இருப்பதால் கிடைப்பது இல்லை.

அதேநேரம் தாம்பரம் நகராட்சியில் அருகில் உள்ள ஊராட்சிகளை இணைக்க வேண்டும் என, அவர்களாகவே வலியுறுத்தி உள்ளனர். அங்குள்ள மக்களே மாநகராட்சியுடன் இணைக்கவே விரும்புகிறார்கள். அதேநேரம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் பதவிக்காலம் முடிந்த பிறகே இதுபற்றி ஆய்வு செய்வோம். அதனை பற்றி கருத்து கேட்டு, எது தேவையோ அதை செய்வோம். ஆய்வு செய்யாமல் எடுத்தவுடனே இணைக்க முடியாது. நீங்கள் சொல்வது போல் 25 ஊராட்சிகளை எல்லாம் இணைக்க வாய்ப்பே இல்லை" என்றார்.

  • Share on

தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது - திருடப்பட்ட ரூபாய் 80,000 மதிப்பிலான இருசக்கர வாகனம் மீட்பு

தூத்துக்குடி சிப்காட்டில் 67 நிறுவனங்கள் இயங்கி வரும் நிலையில், அவற்றில் 27 நிறுவனங்கள் ரெட் கேட்டகிரியில் உள்ளது - உச்ச நீதி மன்றத்தில் வேதாந்தா தரப்பு வாதம்

  • Share on