தூத்துக்குடியில் வருகிற 16ஆம் தேதி திமுக சார்பில் மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக மாவட்டச் செயலாளர்கள் அமைச்சர் கீதா ஜீவன், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நடைபெற இருக்கும் 2024 நாடாளுமன்ற தேர்தலில், கடந்த பத்தாண்டு காலத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டிற்கு இழைத்த அநீதிகளையும், ஒன்றிய அரசிடம் மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்து, தற்பொழுது நாடகமாடும் அடிமை அதிமுக வின் துரோகங்களையும், திராவிட மாடல் அரசின் சாதனைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், முதற்கட்டமாக "உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்" பாசிசம் வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்! என்ற தலைப்பில் கழக முன்னணியினர் பங்கேற்கும் பரப்புரை பொதுக்கூட்டங்கள், நாடாளுமன்ற தொகுதி வாரியாக நடத்திட தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான தளபதி மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்கள்.
தலைவரின் அறிவுரைக்கு இணங்க தூத்துக்குடி வடக்கு தெற்கு மாவட்ட கழகங்களின் சார்பில் வருகிற 16.02.2024 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் தூத்துக்குடி மீளவிட்டான் சாலையில் உள்ள என்.பெரியசாமி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து பிரம்மாண்ட பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பொன்.முத்துராமலிங்கம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களின் குரலாக நடைபெறும் இந்த பரப்புரை கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு தெற்கு மாவட்டக் கழகத்திற்கு உட்பட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற இந்நாள், முன்னாள் உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாநில அணி நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், கிளை மற்றும் வார்டு கழகச் செயலாளர்கள், இளைஞரணி, மாணவரணி, மகளிரணி உள்ளிட்ட கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், கழக செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று பெருந்திரளாகக் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம். என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.