• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் மாணவ/மாணவியர்களுக்கு கல்விக்கடன் வழங்கும் முகாம்: ஆட்சியர் தகவல்

  • Share on

தூத்துக்குடியில் மாணவ/மாணவியர்கள் உயர்கல்வி பயிலுவதற்கு கல்விக்கடன் வழங்கும் முகாம் வருகின்ற 15 ம் தேதி நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில்:-

தூத்துக்குடி மாவட்டத்தில் உயர்கல்வி படிப்பதற்கு பொருளாதாரம் தடையாக இருக்கும் மாணவ,மாணவியர்கள் உயர்கல்வி பயின்று வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்காக கல்வி நிறுவனங்களையும் வங்கியாளர்களையும் ஒருங்கிணைத்து கல்விக்கடன் வழங்கும் முகாம் வருகின்ற 15.02.2024 (வியாழக்கிழமை) அன்று தூத்துக்குடி, காமராஜ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை  9.30  மணியளவில் நடைபெறவுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் உயர்கல்வி பயின்று வரும் மாணவ,மாணவியர்கள் கல்விக்கடன் தேவை என கருதுபவர்கள் கல்விக்கடன் விண்ணப்ப படிவத்தை www.vidhyalakshmi.co.in/ என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை இந்த இணையதளத்தில் நன்கு அறிந்து விண்ணப்பிக்கலாம்.

உயர்கல்வி கலை, அறிவியல், பொறியியல், பொறியியல் சார்ந்த படிப்புகள், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள், தொழிற்கல்வி/தொழில்நுட்ப கல்வி, ஆராய்ச்சி படிப்பு மற்றும் மேலை நாடுகளில்  பயிலுபவர்கள் ஓற்றை சாரள முறை/கலந்தாய்வு மூலம் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் (Management quota) ஆகிய பிரிவுகளின் கீழ் பயிலுபவர்கள் விண்ணப்பிக்கலாம். பெற்றோர் / பாதுகாவலர் ஆண்டு வருமானம்  ரூ. 4,50,000/- மிகாமல் இருக்க வேண்டும். மத்திய/மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயிலுபவர்கள் கற்பிப்பு கட்டணம், சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம், விடுதி கட்டணம், பேருந்து/போக்குவரத்து கட்டணம், கணினி சார்ந்து பயிலுபவர்களுக்கு கணினி வாங்குவதற்குரிய கட்டணமும் பெறலாம்.

தந்தை/தாய் மற்றும் மாணவ/மாணவியர்கள் ஆதார் மற்றும் பான் கார் பெற்றிருத்தல் வேண்டும். பான் கார்டு இல்லாதவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பதிவு எண் பெற்றிருத்தல் வேண்டும். இறுதியாக தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ,; உண்மைச்சான்று, மாற்றுச்சான்றிதழ், கல்விக்கட்டண விபரங்கள் கல்வி நிலையத்திலிருந்து பெற்றிருக்க வேண்டும். முதல் பட்டதாரிச் சான்று,  சாதிச்சான்று, வருமானச்சான்று, வங்கிக் கணக்கு எண், IFSC Code    ஆகிய விவரங்களை தயார் நிலையில் வைத்திருத்தல் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி  தெரிவித்துள்ளார்.

  • Share on

வெளியூர் சென்றிருந்த போது வீட்டில் நகைகள், பணம் கொள்ளை : தூத்துக்குடியில் துணிகரம்!

நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்... தேர்தல் பரப்புரையில் முந்துகிறார்கள் முத்து நகர் உடன்பிறப்புகள்!

  • Share on