ஒட்டப்பிடாரத்தை தலைமை இடமாக வைத்து புதிய போக்குவரத்து கழக பணிமனை அமைத்துத் தருமாறு சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தமிழக சட்டப்பேரவையில் இன்று கோரிக்கை வைத்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்றைய தினம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா பேசுகையில், "ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியானது அதிக கிராமப்புறங்கள் நிறைந்த பகுதியாகும். கிராமப்புறங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்ல பேருந்து வசதி குறைவாக உள்ளது. ஆகவே, ஒட்டப்பிடாரத்தை தலைமை இடமாக வைத்து புதிய போக்குவரத்து கழக பணிமனை அமைத்துத் தருமாறு பேரவை வாயிலாக போக்குவரத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்கிறேன்". மேலும் இது தொடர்பாக அமைச்சருக்கு பல மனுக்களை அளித்துள்ளேன் என்றார்.
எம்எல்ஏ சண்முகையாவின் கோரிக்கைக்கு பதிலளித்த போக்குவரத்துறை அமைச்சர், "அரசின் நிதி நிலையை கருத்திக்கொண்டு, அதற்கு ஏற்ப எம்எல்ஏ வின் கோரிக்கை கருத்தில் கொண்டு சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.