• vilasalnews@gmail.com

கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆய்வு!

  • Share on

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் இன்று (12.02.2024) கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில்  பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் முக்கிய வழக்கு கோப்புகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் காவல் நிலைய போலீசாருக்கு அவர்கள் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்தும் காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கினார்.

இந்த ஆய்வின்போது பயிற்சி காவல் உதவி கண்காணிப்பாளர் வாக்கரே அக்ஷய் அணில், கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் மற்றும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர்  கிங்ஸ்லி தேவ் ஆனந்த் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.

  • Share on

வல்லநாடு அருகே மதுபோதையில் தனியார் பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியவர் கைது!

தூத்துக்குடி அருகே தெற்கு சிலுக்கன்பட்டி சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்

  • Share on