• vilasalnews@gmail.com

வல்லநாடு அருகே மதுபோதையில் தனியார் பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியவர் கைது!

  • Share on

முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மதுபோதையில் தனியார் பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியவர் போலீசார் கைது செய்துள்ளனர்.

முறப்பநாடு கிழக்கு தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன் இசக்கி பாண்டி (34) என்பவர் நேற்று (11.02.2024) முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லநாடு கலியாவூர் மெயின்ரோடு பகுதியில் ஒரு தனியார் பேருந்தை இயக்கி வந்த போது அங்கு மதுபோதையில் வந்த வல்லநாடு கலியாவூர் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் சின்னதுரை (எ) துரை (43) என்பவர் மேற்படி பேருந்தை வழிமறித்து இசக்கி பாண்டியிடம் தகராறு செய்து தவறாக பேசியதுடன் பேருந்தின் முன்பக்க கண்ணாடியும் கல்லால் உடைத்து சேதப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து பேருந்து ஓட்டுநரான இசக்கி பாண்டி அளித்த புகாரின் பேரில் முறப்பநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் வழக்கு பதிவு செய்து மேற்படி சின்னத்துரை (எ) துரையை கைது செய்தார். மேலும் இதுகுறித்து முறப்பநாடு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடியில் கஞ்சா வைத்திருந்தவர் கைது - 400 கிராம் கஞ்சா, ரூ. 48,580 பணம் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்!

கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆய்வு!

  • Share on