• vilasalnews@gmail.com

அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத ஊராட்சி மன்றத் தலைவர் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார்!

  • Share on

கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத மேலஅரசடி ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக கிராம மக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: 

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா, மேலஅரசடி ஊராட்சி மன்றத் தலைவர் ரோகிணிராஜ் என்பவர் பதவியேற்ற நாளில் இருந்து இன்று வரை எந்த விதமான அடிப்படை வசதிகளும் மக்களுக்கு செய்து கொடுக்கவில்லை. ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் உள்ள மினிவிசை பம்பு சின்டெக்ஸ் டேங்க் பழுது அடைந்து தண்ணீர் வீணாக கீழே சிந்தி வருகிறது. 

இதை நாங்கள் ஊராட்சி மன்றத் தலைவரிடம் பலமுறை சொல்லியும் இதுவரை அதை சரிசெய்து தரவில்லை. மேலும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர், ஓட்டப்பிடாரம் ஒன்றிய பெருந்தலைவர் நேரில் வந்து சின்டெக்ஸ் டேங்கை பார்த்து விட்டு பழுது நீக்கம் செய்யச்சொல்லியும் ஊராட்சி மன்றத்தலைவர் பழுது நீக்கம் செய்யவில்லை. 

மேலும், தெரு விளக்கு, பொது சுகாதாரம் ஆகிய அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை. முறைகேடாக மேல அரசடி கிராமத்தில் கண்மாய் கரையில் ஆள்துளை கிணறு அமைத்து விசைபம்பு மூலம் தண்ணீரை சியோன்நகர் வீட்டு மனை பிரிவுகளுக்கு வழங்குகிறார். இதனை தடுத்து, ஊராட்சிமன்றத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

  • Share on

தூத்துக்குடியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்த ஆட்டை திருடிய இருவர் கைது - ஆடு மீட்பு!

தூத்துக்குடியில் கஞ்சா வைத்திருந்தவர் கைது - 400 கிராம் கஞ்சா, ரூ. 48,580 பணம் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்!

  • Share on