• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்த ஆட்டை திருடிய இருவர் கைது - ஆடு மீட்பு!

  • Share on

தூத்துக்குடியில் ஆடு திருடிய இருவரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 15,000 மதிப்புள்ள ஆடு மீட்கப்பட்டது.

சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியைச் சேர்ந்த வேலு மனைவி ராமலட்சுமி (44) என்பவர் நேற்று (11.02.2024) தனது ஆடுகளை தூத்துக்குடி சின்னகண்ணுபுரம் வழ மீளவிட்டான் சாலையில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தபோது ஆடு ஒன்று திருடு போயுள்ளது.

இதுகுறித்து ராமலட்சுமி அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி சுனாமி காலனியைச் சேர்ந்தவர்களான முத்துமுகமது மகன் நாகூர் மீரான் (24) மற்றும் செட்டிகுமார் மகன் சரவணக்குமார் (19) ஆகிய இருவரும் சேர்ந்து மேற்படி ராமலட்சுமி ஆட்டை திருடியது தெரியவந்தது.

இதனையடுத்து சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சண்முகம் வழக்கு பதிவு செய்து நாகூர் மீரான் மற்றும் சரவணக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 15,000 மதிப்புள்ள ஆட்டையும் பறிமுதல் செய்தனர்.

  • Share on

புனித வெள்ளி நாளில் டாஸ்மாக் கடையை மூடணும்.. அரசுக்கு கிறித்துவப் பெருமக்கள் கோரிக்கை!

அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத ஊராட்சி மன்றத் தலைவர் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார்!

  • Share on