• vilasalnews@gmail.com

புனித வெள்ளி நாளில் டாஸ்மாக் கடையை மூடணும்.. அரசுக்கு கிறித்துவப் பெருமக்கள் கோரிக்கை!

  • Share on

புனித வெள்ளி நாளன்று தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கிறித்துவப் பெருமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

29.3.2024 அன்று கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருடைய துன்ப - துயர - துக்க நாளாக, இயேசு கொல்லப்பட்டு இறந்த, அந்த தியாக நாளை, அமைதியின் நாளாக கடைபிடிக்கும் புனித வெள்ளி நாளன்று, தமிழ்நாடு முழுவதும் தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கிறித்துவப் பெருமக்கள்  சார்பில், தூத்துக்குடி மறை மாவட்டம், பரிசுத்த அமலோற்பவமாதா மதுவிலக்கு சபை போதைநோய் நலப்பணிக்குழு இயக்குனர் அருட்தந்தை ஜெயந்தன் தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கோரிக்கையை நீண்ட காலமாக கிறித்துவப் பெருமக்கள் தமிழக அரசிற்கு வைத்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு சிறுபான்மை நல ஆணைய தலைவரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோரும் இந்த கோரிக்கை தொடர்பாக கடந்த காலங்களில் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது.

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சிக்கு புதிய ஆணையர்... இவர் யார் தெரியுமா?

தூத்துக்குடியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்த ஆட்டை திருடிய இருவர் கைது - ஆடு மீட்பு!

  • Share on