தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, மதுரை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக தினேஷ் குமார் பொறுப்பேற்று ஓர் ஆண்டே ஆன நிலையில், பணியிட மாற்றம் செய்யப்பட்டு, மதுரை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும், மதுரை மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மதுபாலன், 2016 இல் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பட்டம் பெற்ற பிறகு, டிசிஎஸ்ஸில் சேர வேண்டாம் என்று முடிவு செய்து, முதல் முயற்சியிலேயே இந்திய ஆட்சிப் பணி தேர்வில் வெற்றியும் கண்டுள்ளார். ஐஏஎஸ் தேர்வில் நாட்டிலேயே 71வது இடத்தைப் பிடித்தார். கடந்த 2018-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ள இவருக்கு வயது 28.
கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராக இருந்த மதுபாலன் மதுரை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார். பின் தற்போது தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இளம் வயதில் தூத்துக்குடி மாநகராட்சியின் ஆணையாளராக இவர் நியமிக்கப்பட்டிருப்பது, அவர் மீது பொதுமக்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.