• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் அடிக்கல் நாட்டுகிறது வின்பாஸ்ட்.. ஆகா எவ்வளவு வேகம்!

  • Share on

வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் பிப்ரவரி 25ம் தேதி அடிக்கல் நாட்ட உள்ளது.

சென்னைக்கு வர இருந்த வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடிக்கு செல்ல முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் தொடர் பேச்சுவார்த்தை காரணமாக இந்த முடிவை வின்பாஸ்ட் நிறுவனம் எடுத்துள்ளதாம். இந்த நிலையில் அந்த நிறுவனம் அடிக்கல் நாட்ட உள்ளது.

டெஸ்லாவிற்கு போட்டியாக இருக்கும் வின்பாஸ்ட் நிறுவனம் தான் தமிழ்நாட்டிற்கு வர உள்ளதாக செய்திகள் வருகின்றன. வின்ஃபாஸ்ட் ஆட்டோ லிமிடெட் என்பது வியட்நாமை தளமாக கொண்ட ஒரு வாகன நிறுவனமாகும். இது வியட்நாமின் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களில் ஒன்றாகும்.

இப்போது இ வாகனங்கள் தயாரிப்பில் முன்னிலையில் இருக்கிறது. மின்சார கார்கள் மற்றும் மின்சார ஸ்கூட்டர்கள் போன்ற மின்சார வாகனங்களை (EV) தயாரிப்பதில் விரிவடையும் முதல் கார் பிராண்டாகும். உலகின் நம்பர் 1 பிராண்ட் இதுதான். இந்த நிறுவனம்தான் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளது. அதுவும் தூத்துக்குடிக்கு தேடி வந்துள்ளது.

  • Share on

தூத்துக்குடியில் டிவியை சரிசெய்ய காலதாமதம் - டிவி மெக்கானிக் இழப்பீடு வழங்க உத்தரவு!

தூத்துக்குடியில் செல்போன் திருடிய வாலிபர் கைது - ரூ.21,000 மதிப்புள்ள செல்போன் மீட்பு!

  • Share on