• vilasalnews@gmail.com

குளத்தூரில் புதிய கலையரங்கம் கட்டும் பணிகள் - விளாத்திகுளம் யூனியன் சேர்மன் தொடங்கி வைத்தார்

  • Share on

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா, குளத்தூர்  ஊராட்சிக்கு உட்பட்ட  பகுதியில் புதிய கலையரங்கம் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரனிடம் கோரிக்கை வைத்தனர். 

இதைத்தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.8 லட்சம் ஒதுக்கீடு செய்து குளத்தூர் பகுதியில் புதிய கலையரங்கம் கட்டுமான பணிக்கான பூமி பூஜையில் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் முனியசக்தி இராமச்சந்திரன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். 

இந்நிகச்சியில், ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜேந்திரன், குருநாதன், ஊராட்சி மன்றத் தலைவர் மாலதி செல்வபாண்டி, ஊராட்சி மன்ற துணை தலைவர் மாரிச்செல்வி, வார்டு உறுப்பினர்கள் ஜீவிதா சதீஷ்குமார், உறுப்பினர் முத்துச்செல்வி பகவதி ராஜ், வார்டு உறுப்பினர் கெங்கு ராஜன், மகளிரணி நிர்வாகி குருலட்சுமி, கிளை நிர்வாகிகள் சந்துரு, சுந்தரம், லட்சுமணன், அஇசமக அவைத்தலைவர் தனுஷ்கோடி முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் ஆ.ராசா மீது அதிமுக வழக்கறிஞர்கள் புகார்

தூத்துக்குடியில் டிவியை சரிசெய்ய காலதாமதம் - டிவி மெக்கானிக் இழப்பீடு வழங்க உத்தரவு!

  • Share on