திமுகவின் துணை பொதுச்செயலாளராகவும் நீலகிரி எம்பியாகவும் இருப்பவர் ஆ ராசா. அவர் பேசும் பேச்சுக்கள் அவ்வப்போது சர்ச்சையை கிளப்பும்.
அந்த வகையில் இப்போது ஆ ராசா, மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பற்றி பேசியிருக்கும் வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் எம்ஜிஆரை தரம் தாழ்ந்த வகையில் லூசு என ஆ ராசா தெரிவித்துள்ளார்.
ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் அதிமுகவை சேர்ந்தவர்களும் ஆ. ராசாவின் பேச்சை கண்டித்து அவர் மன்னிப்பு கோர வேண்டும் என கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தான், மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பற்றி தரக்குறைவாக பேசிய ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் அதிமுக மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் மைக்கல் ஸ்டேனிஸ் பிரபு தலைமையில் அதிமுக வழக்கறிஞர்கள் பிரிவினர் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.