தூத்துக்குடியில் உள்ள மின்கம்பத்தில் கேபிள் டிவி ஓயர்களை விரைவாக அப்புறப்படுத்த வேண்டும் என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் மற்றும் அரசு கேபிள் டிவி நிறுவங்கள் பல செயல்பட்டு வருக்கின்றன. இதன் ஆப்ரேட்டர்கள் வீடுகளுக்கு செலுத்தும் கேபிள் டிவி ஓயர்களை தனியாக அவர்களின் தேவைக்கு ஏற்ப கம்பங்கள் நட்டு வைக்காமல் ஆங்காங்கே இருக்கும் மின் கம்பகங்களில் கட்டி கொண்டு செல்கிறன.
இதனால் மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்களுக்களின் உயிர்களுக்கு அபாயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனை கேபிள் டிவி உரிமையாளர்கள் கவனத்தில் கொண்டு உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதுமட்டுமின்றி,கேபிள் டிவி ஓயர்களினால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் கழக பணியாளருக்கோ,பொதுமக்கள் மற்றும் மின் நுகர்வோருக்கோ மற்றும் கால்நடைகளுக்கோ ஏதோ விபத்து ஏற்பட்டால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் எந்த விதத்திலும் பெருப்பேற்காது. என தெரிவித்துள்ளது.