• vilasalnews@gmail.com

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் மதுபோதையில் தகராறு : கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது!

  • Share on

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் மதுபோதையில் தகராறு செய்து  கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த முனியசாமி மகன் முனீஸ்வரன் (26) என்பவர், கடந்த 05.02.2024 அன்று வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் நின்று கொண்டிருந்த தூத்துக்குடி மீளவிட்டான், கக்கன்ஜி நகரை சேர்ந்த சோமசுந்தரம் மகன் சிவா ஆனந்த் (22), கிழக்கத்தியான் மகன் மந்திரமூர்த்தி (35) மற்றும் தூத்துக்குடி போல்பேட்டை மேற்கு பகுதியை சேர்ந்த பிச்சைராஜ் மகன் ராம்குமார் (25) ஆகியோரிடம் பேசிக் கொண்டிருந்தபோது மதுபோதையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த  சிவ ஆனந்த், ராம்குமார் மற்றும் மந்திரமூர்த்தி ஆகியோர் முனீஸ்வரனிடம் தகராறு செய்து அவரை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து முனீஸ்வரன் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  மாணிக்கராஜ் வழக்குபதிவு செய்து சிவ ஆனந்த், ராம்குமார் மற்றும் மந்திரமூர்த்தி ஆகிய மூவரையும் கைது செய்தார். மேலும் இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட சிவ ஆனந்த் மீது ஏற்கனவே சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், ராம்குமார் மீது திருச்செந்தூர் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், மத்தியபாகம் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும் வடபாகம் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும் என 4 வழக்குகளும், மந்திரமூர்த்தி மீது தென்பாகம் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Share on

சட்டவிரோத சூதாட்டம் - 11 பேர் கைது - 10 செல்போன்கள், ரொக்க பணம் ரூபாய் 1,46,370, 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் - தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அதிரடி

தூத்துக்குடியில் ஆ.ராசா மீது அதிமுக வழக்கறிஞர்கள் புகார்

  • Share on