குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூடல்நகர் அருகே உள்ள காட்டு பகுதியில் வைத்து சட்டவிரோதமாக பணத்திற்காக சீட்டு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி, குலசேகரன்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் ரெகுராஜன் தலைமையில் உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் போலீசார் நேற்று (06.02.2024) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூடல்நகர் அருகே உள்ள காட்டு பகுதியில் வைத்து நாகர்கோவில், வெள்ளமடம் பகுதியை சேர்ந்த பால்பாண்டி மகன் பொன்ராஜ் (45), கொம்பன்குளம் பகுதியை சேர்ந்த முத்துகருப்பன் மகன் அம்மா முத்து (52), வட்டன்விளை பகுதியை சேர்ந்த சின்னதுரை மகன் நாராயணன் (60), சாத்தான்குளத்தை சேர்ந்த ராமசாமி மகன் தளவாய் (56), திசையன்விளை பகுதியை சேர்ந்தவர்களான லிங்கபாண்டி மகன் பாக்கியசீலன் (54), பூசதுரை மகன் ராஜேஷ் (42), பேட்டைகுளம் பகுதியை சேர்ந்த அபூபக்கர் மகன் ரபீக் அலி (53), ஸ்ரீவைகுண்டம் வெள்ளூர் பகுதியை சேர்ந்த நாகேந்திரன் மகன் இசக்கிபாண்டி (35), காளான் குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஷேக் முகமது மகன் புகாரி (65), ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி பகுதியை சேர்ந்த முத்துசாமி மகன் செல்வபாபு (32) மற்றும் படுக்கபத்து மறக்குடி பகுதியை சேர்ந்த முத்தையா மகன் வீரபாண்டி (44) ஆகிய 11 பேரும் சேர்ந்து சட்டவிரோதமாக பணத்திற்காக சீட்டு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் 11 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூபாய் 1,46,370 ரொக்கப்பணம், 10 செல்போன்கள், 6 இருச்சக்கர வாகனங்கள் மற்றும் சீட்டுக்கட்டுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து குலசேகரன்பட்டினம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.