தூத்துக்குடி அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தார். அவரது கணவர் படுகாயம் அடைந்தார்.
தூத்துக்குடி முத்தையாபுரம் தோப்புத் தெருவைச் சேர்ந்தவர் செல்லதுரை (55). இவரது மனைவி குருசெல்வி (43). இந்த தம்பதியர் கடந்த 5ஆம் தேதி பைக்கில் தூத்துக்குடி - எட்டயபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் அருகே சென்றபோது பின்னால் வேகமாக வந்த லாரி, பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட கணவன்-மனைவி இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து அவர்களௌ இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி குருசெல்வி நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொ) மோகன்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.