நெல்லை மாவட்டம், கிருஷ்ணாபுரம் அருகே உள்ள பற்பகுளம் நெல்லை - திருச்செந்தூர் சாலையோரத்தில், நீர் நிலையை ஒட்டியுள்ள 184 ஏக்கர் புறம்போக்கு நிலம் கடந்த 2016 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு சார் பதிவாளராக இருந்த குமரேசன் போலியாக தனிநபருக்கு பத்திரப்பதிவு செய்தார்.
சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு புறம்போக்கு நிலத்திற்கு போலியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது குறித்து பத்திரப்பதிவு ஐஜிக்கு புகார் சென்றது.
ஐஜி உத்தரவின் பேரில் நெல்லை பத்திரப்பதிவு டிஐஜி செந்தமிழ்ச்செல்வன் போலி பத்திரம் செய்யப்பட்ட நிலத்தை ஆய்வு செய்தார். அதனை அடுத்து புறம்போக்கு நிலத்தை பத்திரப்பதிவு செய்த முறப்பநாடு சார்பதிவாளர் குமரேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் தற்போது கடையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.