• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் உயர் மட்ட ரயில் பாதை : திமுக தேர்­தல் அறிக்கை தயா­ரிக்­கும் குழுவிடம் காங்கிரஸ் கோரிக்கை

  • Share on

2024 ல் நடை­பெற இருக்­கும் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லுக்­காக திமுக சார்­பில் தேர்­தல் அறிக்கை தயா­ரிக்­கும் குழு அமைக்­கப்­பட்­டு உள்ளது. இக்­கு­ழு­வின் தலை­வ­ராக திமுக துணைப் பொதுச் செய­லா­ள­ரும், தூத்­துக்­குடி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கனி­மொழி கரு­ணா­நிதி நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்­.

இந்த தேர்­தல் அறிக்கை தயா­ரிக்­கும் குழு­வி­னர் தமிழ்­நாட்­டின் ஒவ்­வொரு பகு­திக்­கும் நேரில் சென்று பல்­வேறு தரப்­பட்ட மக்­களை சந்­தித்து தேர்­தல் அறிக்­கை­யில் இடம்­பெற வேண்­டியவைகள் குறித்த கோரிக்கை மனுக்­களை பெற உள்ளனர். அதன்­படி தூத்­துக்­குடி நாடா­ளு­மன்ற தொகு­திக்கு இன்று (05.02.2024 - திங்­கள் கிழமை) காலை தூத்­துக்­குடி - திருச்­செந்­தூர் சாலை, உள்ள மாணிக்­கம் மஹா­லில் கோரிக்கை மனுக்­களை பெற்றனர்.

அப்பொழுது, தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில், தேர்­தல் அறிக்­கை­யில் இடம்­பெற வேண்­டிய தங்களது சார்பான கோரிக்கை மனுவினை அளித்தனர்.

அதில், தூத்துக்குடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் வகையில் தூத்துக்குடி ரயில் நிலையத்திலிருந்து புறநகர் வரை மேம்பாலம் அமைத்து அதில் ரயில் தடங்கள் பதித்து, உயர் மட்ட ரயில் பாதை அமைத்து அதன் மூலம் ரயில்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் கீழ் உள்ள நூறு நாள் வேலையாட்களை, கிராம புறங்களில் களை எடுத்தல், நாற்று நடுதல், அறுவடை பணி உள்ளிட்ட விவசாயத் தொழில்களில்  ஈடுபடுத்திட வேண்டும்.

மீனவர்களுக்கு மீன்பிடி தடைகாலத்தில் வழங்கப்படும் நிவாரணத் தொகையை போல, பேரில் காலங்களில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படும் நாட்களையும் இணைத்து, அவர்களுக்கு உதவித்தொகையை இரட்டிப்பாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரயிலில் பயணிக்கின்ற மூத்த குடி மக்களுக்கு வழங்கிய பயண சலுகைகளை மோடி அரசு ரத்து செய்தது. மீண்டும் மூத்த குடி மக்களுக்கு இச்சலுகையை கிடைத்த உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை இடம்பெற்றிருந்தன.

  • Share on

மனைவி கண் முன்னே ஆற்றில் மூழ்கி கணவர் உயிரிழப்பு!

தூத்துக்குடியில் நில அபகரிப்பு மோசடி - பாஜக பொறுப்பாளர்கள் மீது புகார்

  • Share on