• vilasalnews@gmail.com

மனைவி கண் முன்னே ஆற்றில் மூழ்கி கணவர் உயிரிழப்பு!

  • Share on

ஏரல் தாமிரபரணி ஆற்றில் குளித்த போது, நீரில் மூழ்கி மனைவி கண் முன்னே கணவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மேற்கு மில்லர்புரம் அண்ணா நகர் 2-வது தெருவை சேர்ந்த ராஜாசிங் மகன் கனகவேல் (43).இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நேற்று தனது மனைவி மற்றும் மகன்களுடன் இருசக்கர வாகனத்தில் ஏரல் தாமிரபரணி் ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். 

அனைவரும் ஆற்றுப்பாலத்திற்கு மேற்புறம் குளித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்று தண்ணீரில் அவர் மூழ்கியுள்ளார். இதை பார்த்த அவரது மனைவி கூச்சல் போட்டுள்ளார். அதைக்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவருவதற்குள் தண்ணீரில் மூழ்கி அவர் இறந்து போனார். இதுகுறித்து ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக உயிரிழப்பு

தூத்துக்குடியில் உயர் மட்ட ரயில் பாதை : திமுக தேர்­தல் அறிக்கை தயா­ரிக்­கும் குழுவிடம் காங்கிரஸ் கோரிக்கை

  • Share on