தூத்துக்குடியில் மின் மோட்டார் சுவிட்சை போட்டபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி அண்ணா நகர் 1வது தெருவைச் சேர்ந்தவர் சரவண பெருமாள். இவரது மனைவி செல்வி (61). இவர் நேற்று மாலை வீட்டில் மின் மோட்டார் சுவிட்சை போட்டபோது எதிர்பாராத விதமாக அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.