கந்துவட்டி கும்பலுக்கு ஆதரவாக கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஹரி கண்ணன் என்பவர் ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி., உத்தரவிட்டுள்ள நிலையில், உதவி ஆய்வாளர் ஹரி கண்ணனைனை மீண்டும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில்த்தில் பணியமர்த்த கோரி கோவில்பட்டில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள அய்யநேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகப் பாண்டி. இவர் தனியார் மினிபேருந்து நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாரதி நகரைச் சேர்ந்த முருகன் என்பவரிடம் 1லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் வட்டிக்கு வாங்கியுள்ளார். இதில் 1லட்சத்து 5 ஆயிரம் அசல் மற்றும் 30 ஆயிரம் வட்டி ஆகியவற்றை ஆறுமுகப்பாண்டி, முருகனிடம் திருப்பி கொடுத்தாராம்.
இதற்கிடையில் மேலும் 64 ஆயிர ரூபாய் பணம் கேட்டு முருகன் ஆறுமுகப்பாண்டியை மிரட்டியதாகவும், இது தொடர்பான விவகாரம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகாராக வர,
இந்த புகாரில் அப்போது விசாரணை அதிகாரியாக செயல்பட்ட காவல் உதவி ஆய்வாளர் ஹரி கண்ணனை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆறுமுகநேரி காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது அந்த விசாரணையின் போது ஒருதலைபட்சமாக செயல்பட்டதாக வந்த புகாரையடுத்து, தற்போது காவல் உதவி ஆய்வாளர் அரிக்கண்ணனை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தநிலையில், கோவில்பட்டி புதிய பேருந்து நிலைய ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கம் சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால், உதவி ஆய்வாளர் அரிக்கண்ணனை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
அந்த சுவரொட்டில், "மாற்றாதே.. மாற்றாதே.. கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் நேர்மையாக பணியாற்றிய உதவி ஆய்வாளர் அரிக்கணன் அவர்களை மீண்டும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு பணி அமர்த்திட, மாவட்ட நிர்வாகத்தையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களையும் கேட்டுக்கொள்கிறோம்" என தெரிவிக்கப்பட்டடுள்ளது.
உதவி அய்வாளர் அரிக்கண்ணணுக்கான இந்த ஆதரவிற்கான காரணத்தை ஆராயும் போது, கந்து வட்டி கொடுமையால் கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் 9-வது தெருவை ஆறுமுகப்பாண்டி என்பவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, அய்யநேரி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகப் பாண்டி என்பவர் தனது கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் இருந்து தப்பித்து கொள்ள, முன்பு அவரை விசாரணைக்கு அழைத்த உதவி ஆய்வாளார் அரிக்கண்ணனின் பழைய ஆடியோவை தற்போது வெளியிட்டு வேறு விதமாக மாற்றி உதவி ஆய்வாளார் அரிக்கண்ணன் மீது பழி ஏற்படுத்தி, அவரை திட்டமிட்டு ஆயுதப்படைக்கு மாற்றப்படக்கூடிய நிலையை வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன் நேர்மையானவர் என்றும், அவர் கடந்த காலங்களில் பணியாற்றிய விதமும், அதற்காக அவர் பெற்ற பாராட்டு சான்றிதழ்களுமே சாட்சி என்கின்றனர்.
கடந்த 19.03.2021 அன்று கயத்தார் காவல் நிலைய எல்லைகுட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததிற்காகவும்,
கடந்த 2021 ம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்களை திருடி வந்தரை கைது செய்து ரூபாய். 3 லட்சம் மதிப்புள்ள 6 இருசக்கர வாகனங்களை கைப்பற்றியதற்காகவும்,
கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மீன் கடை உரிமையாளரை கடத்தி சென்ற வழக்கில் 5 பேரை கைது செய்து, கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்களையும் பறிமுதல் செய்ததிற்காகவும்,
கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட நபர்களை விரைந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பியதற்காகவும்,
கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் சம்மந்தப்பட்ட 3 பேரை கைது செய்து சொத்துக்களை கைப்பற்றி நிலையத்தில் ஒப்படைத்தற்காகவும் என பல்வேறு வழக்குகளில் சிறப்பாக பணியாற்றி, அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் தற்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோரது கைகளால் மெச்சத்தகுந்த பணிகளுக்கான பாராட்டுச் சான்றிதழை உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன் பெற்றுள்ளார்.
மேலும், 2022, 2023 ஆம் ஆண்டுகளில் தூத்துக்குடியில் நடைபெற்ற சுதந்திர தின விழாக்களில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கான பாராட்டு சான்றிதழையும் உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கையால் பெற்றுள்ளார்.
மேலும், தமிழ்நாடு அரசு மாவட்ட, மாநகர அளவிலான சிறந்த காவல் நிலையங்களை தேர்வு செய்து ‘தமிழ்நாடு முதலமைச்சர்” பரிசு வழங்கியுள்ளது. அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான விருதை மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன் மற்றும் ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் ஆகியோரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வழங்கி இதே போன்று எப்போதும் சிறந்து விளங்க வேண்டும் என்ற வாழ்த்தி பாராட்டினார் என்பதும் குறிப்பிட தக்கது.
ஆகவே, உதவி ஆய்வாளர் அரிக்கண்ணின் பணிகளுக்கு சாட்சியாக, கடந்த காலங்களில் அவர் பெற்று இருக்கக்கூடிய இவ்வளவு பாராட்டு சான்றிதழ்களை கவனத்தில் கொண்டு, ஆயுதப்படை மாற்றத்திற்கான உத்தரவை திரும்ப பெற்று, மீண்டும் காவல் நிலையத்தில் பணியாற்றிடக்கூடிய வாய்ப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளது.
எதையுமே ஆழ்ந்து ஆராய்ந்து, பொதுமக்களின் நலனுக்காக முடிவு எடுத்து பணியாற்றக்கூடிய நமது தூத்துக்குடி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன் விவகாரத்திலும் நல்லதொரு முடிவை எடுப்பார் என நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம் என்கின்றனர் சமூக ஆர்வலர்.