தூத்துக்குடி மாவட்டம், ஏரல் உமரிக்காடு பகுதியில் காவல்துறை பொதுமக்கள் கலந்துரையாடல் கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தஎஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் உமரிக்காடு ஊராட்சி திருமண மண்டபத்தில் பொதுமக்கள் காவல்துறை கலந்துரையாடல் கூட்டத்திற்கு இன்று 18.11.2020 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் ஊர்த்தலைவர் மலப்பழம் என்ற நடேசன் பஞ்சாயத்து தலைவர் ராஜேஷ்குமார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது ஸ்ரீவைகுண்டம் துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன், ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் முத்துலட்சுமி உள்ளிட்ட காவல்துறையினர் பலர் உடன் இருந்தனர்.