தூத்துக்குடி மாவட்டத்தில் டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலை அடுத்து காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, சாத்தான்குளம் டிஎஸ்பி அருள் திருமங்கலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். சென்னை பெருநகரம் கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி கமிஷனர் ஜெய்சிங், தூத்துக்குடி அமலாக்க பிரிவு டிஎஸ்பியாக சிவசுப்புவிற்கு பதில் மாற்றப்பட்டுள்ளார்.
திருவாரூரில் பணியாற்றிய ராமகிருஷ்ணன் விளாத்திகுளம் டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். தூத்துக்குடி ஊரக டிஎஸ்பியாக ராணிப்பேட்டையில் பணியாற்றிய ராஜசுந்தர் மாற்றப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக ராஜு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ளார்.