மத்திய வேளாண் சட்ட திருத்தத்தை கைவிட கோரி அனைத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தூத்துக்குடியில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள எல்ஐசி அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரசல் தலைமை தாங்கினார். பின்னர், மத்திய அரசை கண்டித்தும், வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு, ஏஐடியுசி,ஐஎன்டியுசி,தொமுச, எச்எம்எஸ் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களை சார்ந்தவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.