• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் பட்டபகலில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு வழக்கு : கணவர் உட்பட 3பேர் கைது!

  • Share on

தூத்துக்குடியில் பெண்ணை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற வழக்கில் கணவர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள அல்லிக்குளம் கிராமத்தை சோ்ந்தவா் குணா என்ற பொன் தங்கம் (35). இவரது மனைவி அமராவதி(28). இவா்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனா். அமராவதி மகளிா் குழுவில் தலைவியாக உள்ளார். கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

விவாகரத்துக்கும் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனராம். இந்நிலையில் நேற்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மகளிா் திட்டம் சாா்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்றுவிட்டு, அமராவதி தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது கோரம்பள்ளம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது குணா மற்றும் அவரது உறவினர்கள் அவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் அமராவதியை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டனர். இதில், பலத்த காயமடைந்த அமராவதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக புகாரின் பேரில் புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் ராமலட்சுமி கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து,  அவரது கணவர் ஸ்ரீவைகுண்டம் பிச்சனார் தோப்பைச் சேர்ந்த முத்துராஜ் மகன் பொன்தங்கம் என்ற குணா (25), அவரது அண்ணன் முருகன் என்ற மருது (27), உறவினர் முனியன் மகன் வள்ளி (23) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

  • Share on

ஓட்டப்பிடாரம் அருகே பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவருக்கு 2 ஆண்டுகள் சிறை!

தூத்துக்குடியில் திறக்க உள்ள புதிய பூங்காவிற்கு சித்திரைவேல் பெயரை சூட்ட வேண்டும் - பகுதி சபா கூட்டத்தில் கோரிக்கை

  • Share on