சென்னை அண்ணா அறிவாலயத்தில் மக்களவை தேர்தல் பணி தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவினர் மற்றும் திமுக உயர்மட்ட குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் திமுக நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. அதன்படி திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் அமைச்சர் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மக்களவை தேர்தல் பணி தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவினர் மற்றும் திமுக உயர்மட்ட குழுவினர் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான கீதாஜீவன், தெற்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா, மார்க்கண்டேயன், மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திமுக ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.