• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு!

  • Share on

தூத்துக்குடி அருகே பட்டப்பகலில் இளம் பெண்ணை வெட்டிச் சென்ற அவரது கணவரை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை அல்லிக்குளம் கிராமத்தில் வசிப்பவர் பொன்தங்கம் என்ற குணா (35). இவரது மனைவி அமராவதி (28). இவர் மகளிர்குழு தலைவியாக உள்ளார். இத்தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவிக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு இருந்து வந்ததாம். இந்த நிலையில் இன்று மதியம் சுமார் 12 மணி அளவில் அமராவதி தனது ஸ்கூட்டியில் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சுய உதவிக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பின்னர் அல்லிக் குள‌த்திற்கு ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது, தூத்துக்குடி திருநெல்வேலி சாலை கோரம்பள்ளம் பஸ் ஸ்டாப் அருகே செல்லும்போது எதிரே வந்த அவரது கணவர் பொன் தங்கம் என்ற‌ குணா அவரை வழி மறித்து சரமாரியாக கழுத்தில் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் அமராவதி கழுத்தில் பின்பக்க பகுதியில் பலத்த வெட்டு காயத்துடன் ஸ்கூட்டியில் இருந்து கீழே சரிந்து விழுந்தார். பின்னர், குணா அங்கிருந்து அவரது பைக்கில் தப்பி சென்று விட்டார்.

இதனையடுத்து, பலத்த காயத்துடன் ரோட்டில் கிடந்த அப்பெண்ணை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து, உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அவரது கணவர் பொன் தங்கம் என்று குணாவை தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Share on

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மத நல்லிணக்க உறுதி ஏற்பு!

தூத்துக்குடி திமுக மாவட்ட செயலாளர்கள் முதல் ஒன்றியச் செயலாளர்களை வரை... ஒட்டுமொத்தமாக சென்னையில் முகாம்!

  • Share on