மகாத்மா காந்தியின் 77 வது நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், மாநகர் மாவட்ட தலைவர் சி எஸ் முரளிதரன் தலைமையில், காங்கிரஸ் கட்சியினர் பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு அமைந்துள்ள காந்தியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பயங்கரவாத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் ஐசன் சில்வா, ராஜன், அமைப்புசாரா மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், மாநகர் மாவட்ட துணைத் தலைவர்கள் விஜயராஜ், சின்னக்காளை, ரஞ்சிதம் ஜெபராஜ், டேவிட் வசந்தகுமார், அருணாசலம் ,மாவட்டச் செயலாளர்கள் கோபால் ,ஜெயராஜ், நாராயணசாமி, முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் வெங்கடசுப்பிரமணியம், வார்டு தலைவர்கள் பிரபாகர், முனியசாமி, சுப்பிரமணியன், கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.