தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஒன்றிய அதிமுக செயலாளர் ராமச்சந்திரன், அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலரும், மீன்வளம்-மீனவர் நலன், கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணனை, சந்தித்த ராமச்சந்திரன் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் திமுக மாநில வார்த்தை அணி இணைச் செயலாளர் உமரி சங்கர், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் செல்வகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.