கயத்தாறு ஒன்றிய அதிமுக சார்பில் முப்பெரும் விழா சோழபுரம் கிராமத்தில் நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் தாலுகா சோழபுரம் கிராமத்தில், கயத்தாறு ஒன்றிய அதிமுக சார்பில், அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆரின் 107 வது பிறந்த நாளை முன்னிட்டு, ஏழை எளிய மக்களுக்கு உதவி தொகை மற்றும் கல்வி உதவி தொகை வழங்கல், அமமுக உள்ளிட்ட மாற்று கட்சியினர் அதிமுகவில் இணைதல் மற்றும் அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட முப்பெரும் விழா நாளை ( 28.1.24 ) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
இவ்விழாவில், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும், அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கடம்பூர் செ.ராஜூ, விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கயத்தாறு அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி, ஒன்றிய அவைத் தலைவர் முனியசாமி மற்றும் சோழபுரம் கிளை அதிமுக நிர்வாகிகள் செய்துள்ளனர்.