தூத்துக்குடியில் உணவு என்பது ஒரு முக்கியமான பண்பாட்டு அம்சமாகும். பாரம்பரிய சுவையுடன் கூடிய தரமான அசைவ உணவுக்காக தூத்துக்குடி நகரம் பிரபலமாகும். இந்த நிலையில், தூத்துக்குடியில் ஒரு புதிய அசைவ உணவகம் திறக்கப்படவுள்ளது.
ஸ்ரீ குறிஞ்சி A/C ரெஸ்டாரண்ட் என்ற பெயரில் வரும் இந்த குடும்ப உணவகம் இயற்கை எழில் கொஞ்சும் பரந்த நிலப்பரப்பில் அமைந்துள்ளது. குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்து ரசித்து சுசித்து சாப்பிடக்கூடிய வகையில் இந்த உணவகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த உணவகமானது தூத்துக்குடி 4 வது ரயில்வே கேட் அருகே, மீளவிட்டான் செல்லும் சாலையில், 160F/4B, குறிஞ்சி நகர் 4வது தெரு, (மேலுார் ரயில் நிலையம் மேல்பக்கம்), போல்நாயக்கன்பேட்டை பகுதியில் நாளை 28.01.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு திறப்பு காண்கிறது.
இந்த திறப்பு விழாவிற்கு, ஐஎன்டியூசி மாநில செயல் தலைவர் கதில்வேல் தலைமை தாங்குகிறார். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி, காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் ஏபிசிவி சண்முகம், சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா, மார்க்கண்டேயன், மதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் ரமேஷ், தெற்கு மாவட்ட செயலாளர் புதுக்கோட்டை செல்வம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் உணவகத்தை திறந்து வைக்கிறார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மற்றும் தெற்கு வீரபாண்டியபுரம் நாச்சியாரம்மாள் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றுகின்றனர்.
கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர்.
வீரபாண்டி செல்லச்சாமி, பரமகுருராஜ் செல்லச்சாமி, பரமேஸ்வரி என்டர்பிரைசஸ் உரிமையாளர் அசோக்குமார், பெங்களுரு டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் சேது, சத்தீஷ் ஆகியோர் விழாவிற்கு வகை தருபவர்களை வரவேற்று நன்றி கூறுகின்றனர்.