தூத்துக்குடி மாவட்டத்தில் டிசம்பர் 2023 ல் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது ஏற்பட்ட மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர் எம்பவர் சங்கரின் சிறந்த பங்களிப்பினை பாராட்டி இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி நற்சான்றிதழ் வழங்கினார்.
எம்பவர் இந்தியா அமைப்பின் கௌரவ செயலாளர் சங்கர் சர்வதேச அளவில் நுரையீரல் நோய் பவுண்டேஷனின் தலைவராகவும், தேசிய அளவில் தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் துணைத்தலைவராகவும், இந்திய நுகர்வோர் உரிமை அமைப்பின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகின்றார்.
மேலும் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய பொறுப்புத் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். மேலும் சமூக சேவை தொடர்பாக இங்கிலாந்து, அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின், மலேசியா, இலங்கை, தாய்லாந்து, கென்யா, சிங்கப்பூர், துபாய், அபுதாபி, தோகா, ஷார்ஜா மற்றும் நேபாள் ஆகிய நாடுகளில் நடைபெற்ற சர்வதேச மாநாடுகளில் இவர் பங்கேற்றுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், திட்ட அலுவலர் ஐஸ்வர்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.