• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் 75வது குடியரசு தின விழா

  • Share on

தூத்துக்குடியில் 75வது குடியரசு தின விழா இன்று (26.01.2024) காலை தருவை மைதானம் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அமைதியையும், சமாதானத்தையும் வலியுறுத்தும் விதமாக வென்புறாக்கள் பறக்கவிடப்பட்டது. மேலும் அரசுத்துறையில் சிறப்பாக பணியாற்றிவர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார். பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.


தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையினரின் அணிவகுப்பை காவல் ஆய்வாளர் சுனைமுருகன் தலைமையில் கம்பீரமாக அணிவகுத்து வர 1வது படைப்பிரிவின் கமாண்டராக உதவி ஆய்வாளர் பிரம்மநாயகம், 2வது படைப்பிரிவின் கமாண்டராக உதவி ஆய்வாளர் கௌசல்யா மற்றும் 3வது படைப்பிரிவின் கமாண்டராக சிறப்பு உதவி ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்து ஆயுதப்படையின் ஆண் காவலர்கள் இரு அணிகளாகவும், பெண் காவலர் ஒரு அணியாகவும், அவர்களை தொடர்ந்து தீயணைப்பு படைப்பிரிவு கமாண்டராக நிலைய தீயணைப்பு அதிகாரி ராஜமூர்த்தி, ஊர்க்காவல் படைப்பிரிவு கமாண்டர் உலகம்மாள், தேசிய மாணவர் படை - ராணுவ படைப்பிரிவு உச்சிமாகாளி, தேசிய மாணவர் படை - கடற்படைப்பிரிவு மாரிமுத்து, சாரணர் செல்வன். முத்து, சாரணியர் செல்வி. அகிலா கீதா, இசைக்குழு ஆயுதப்படை முதல் நிலை காவலர் அருணாச்சலம் ஆகியோர் தலைமையில் அணிவகுப்பு நடைபெற்றது.


இதனையடுத்து தமிழ்நாடு காவல்துறை தூத்துக்குடி மாவட்டத்தில் 10 வருடங்கள் சிறப்பாக பணிபுரிந்த 80 காவல்துறையினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பதக்கம் வழங்கப்பட்டது. மேலும் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன், சாத்தான்குளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அருள் ஆகியோர் உட்பட காவல்துறை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், அமைச்சுபணியாளர்கள் உட்பட 79 காவல்துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களின் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.


தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கம் பெற்ற காவல்துறையினரையும், மாவட்ட ஆட்சியர் அவர்களின் பாராட்டுச் சான்றிதழ் பெற்ற காவல்துறையினரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டினார்.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட அமைப்புகள் மறுசீரமைப்பு - டிடிவி தினகரன் அறிவிப்பு

மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர் எம்பவர் சங்கருக்கு சிறந்த சேவைக்கான நற்சான்றிதழ்!

  • Share on