தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட அமைப்புகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. இதன்படி, தூத்துக்குடி மாநகர் மற்றும் தூத்துக்குடி புறநகர் என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாநகர் மாவட்டத்தில் தூத்துக்குடி, விளாத்திக்குளம், கோவில்பட்டி ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகள் அடங்கும். தூத்துக்குடி புறநகர் மாவட்டத்தில் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகள் அடங்கும்.
தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளராக T.விர்ஜின் ஆரோக்கிய பிரைட்டர், தூத்துக்குடி புறநகர் மாவட்ட செயலாளராக பா.ஜானியேல் சாலமோன் மணிராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாற்றங்கள் குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தின் நிர்வாக வசதிகளுக்காக "தூத்துக்குடி மாநகர்" மற்றும் "தூத்துக்குடி புறநகர்" என இரண்டு கழக மாவட்டங்களாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் கழக நிர்வாகத்தை வலுப்படுத்தும் என்று நம்புகிறேன்.
மாவட்ட கழக செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கழக பணிகளை ஆற்றிட கழக உடன்பிறப்புகளை கேட்டுக்கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.
மேலும், ,தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழக செயலாளர் பொறுப்பிலிருக்கும் சிவபெருமாள், தூத்துக்குடி தெற்கு மாவட்டக் செயலாளர் பொறுப்பிலிருக்கும் மனோகரன் ஆகியோர் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள். கழக அமைப்பு செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து அவர்கள் செயலாற்றுவார்கள். என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்