தூத்துக்குடியில் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பு தலைவர் பிரான்சிஸ் இல்லத் திருமண விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பு தலைவர் பிரான்சிஸ் மகன் வின்சென்ட் அபில்டன் - ஜெஃபிரின் திருமணம் ஆலந்தலை ராயப்பர் சின்னப்பர் தேவாலயத்தில் மறை மாவட்ட முன்னாள் ஆயர் யுவன் அம்பரோஸ் தலைமையில் 22.1.24 அன்று நடைபெற்றது. அதன் பிறகு ஆலந்தலையில் திருமண மஹாலில் அம்மா லவ்வர் மாதா குடிபோதை மறுவாழ்வு இயக்க செயலாளர் அருட்தந்தை ஜெயந்தன் மற்றும் ஆலந்தலை பங்குதந்தை சில்வெஸ்டர் பாலன் தலைமையில் திருமண விழா கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மணமக்கள் வீட்டார் குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வதித்தனர். அதன்பிறகு இரவு 7 மணி அளவில் தூத்துக்குடி தெற்கு பீச் ரோடு மாதா கோவில் அருகில் ஸ்னோஹால் திருமண மஹாலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கனிமொழி எம்பி வாழ்த்து
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மணமக்களுக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.
அதில், 22 l.1 l.2024 திங்கள்கிழமை அன்று வின்சென்ட் அபில்டன் - ஜெஃபிரின் இருவருக்கும் திருமணம் நடைபெற்றதை அறிந்து மகிழ்ந்தேன். வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் ஆணும் பெண்ணும் சமம் என்று தொடர்ந்து வலியுறுத்திய தந்தை பெரியாரின் கொள்கைகளை பின்பற்றி மணமக்கள் இருவரும் சரி நிகராக வளம் பல பெற்று நலமுடன் வாழ எனது மனதார வாழ்த்துக்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.