• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாணவியை டெல்லிக்கு வர அழைப்பு கொடுத்த மத்திய அரசு!

  • Share on

தூத்துக்குடியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி டிவைனா, மத்திய அரசின் ‘வீர் கதா’ திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட கவிதை போட்டியில் வெற்றிபெற்று, டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் பங்கேற்க அழைப்பு பெற்றுள்ளார்.

டிவைனா, தூத்துக்குடி பிஎம்சி பள்ளியில் பயின்று வருகிறார். கடந்த ஆண்டு நடந்த ‘வீர் கதா’ திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட கவிதை போட்டியில், டிவைனா, சுதந்திரப் போராட்ட வீராங்கனை ஜான்சி ராணி லட்சுமிபாய் குறித்து ஆங்கிலத்தில் கவிதை எழுதி முதலிடம் பெற்றார்.

இதன்மூலம், நாடு முழுவதும் இந்தப் போட்டிகளில் வெற்றிபெற்ற 100 மாணவா்-மாணவிகளுக்கும் டெல்லியில் வரும் 25ஆம் தேதி ரூ.10 ஆயிரம் மற்றும் விருது வழங்கப்படுகிறது. மேலும், வரும் 26ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பை பார்வையிடவும், மாணவி டிவைனா மற்றும் அவரது பெற்றோருக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான அனைத்துச் செலவுகளையும் மத்திய அரசே செய்கிறது.

இந்த அழைப்பை பெற்ற டிவைனா, மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார். குடியரசு தின விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு, மத்திய அரசுக்கு நன்றிய தெரிவித்தார். மேலும், தனது வெற்றிக்கு பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரின் ஒத்துழைப்பே காரணம் எனவும் கூறினார்.

டிவைனாவின் வெற்றி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. அவரது வெற்றிக்கு, அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மாணவியை பள்ளி நிா்வாகி ஜோசப் கென்னடி, பள்ளி முதல்வா் பால்கனி மற்றும் ஆசிரியா்கள் உள்ளிட்டோரும் பாராட்டினா்.

  • Share on

தூத்துக்குடியில் இன்று அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து - நகர செயற்பொறியாளர் அறிவிப்பு

பத்திரிகை-தொலைக்காட்சி கூட்டமைப்பு தலைவர் பிரான்சிஸ் இல்லத் திருமண விழா - கனிமொழி எம்பி வாழ்த்து

  • Share on