தூத்துக்குடியில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (24 ஆம் தேதி) புதன்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளதாக, நகர செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மின்வாரிய தூத்துக்குடி நகா் கோட்ட செயற் பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம் 110/22-11கிவோ அய்யனார்புரம் துணை மின்நிலையத்தில் இன்று 24.01.2024 (புதன்கிழமை) அன்று காலை 09.00 மணி முதல் மாலை 04:00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக காமராஜர் நகர், கீழ அரசடி, மேல அரசடி, திரேஸ்நகர், சாகிர் உசேன் நகர், டேவிஸ்புரம், ஜீவா நகர், அலங்கார தட்டு, மேட்டுப்பட்டி,நேருகாலனி கிழக்கு, சுனாமிநகர், வாலசமுத்திரம், பூபாலராயர் புரம், மாணிக்கபுரம், வெற்றிவேல் புரம், சங்குகுளி காலனி, தளவாய்புரம், பட்டிணமருதூர், ராமர்விளை, மாப்பிள்ளையூரணி, ஜோதிநகர், ஆரோக்கியபுரம், லூர்தம்மாள்புரம், தாளமுத்துநகர், கிருஷ்ணராஜபுரம், முத்துகிருஷ்ண புரம், ஹவுசிங்போர்டு,
குமரன் நகர், கோவில்பிள்ளை விளை, குருஸ்புரம், திரேஸ்புரம், பண்ணையூர், வெள்ளப்பட்டி, தருவைகுளம், T.சவேரியர்புரம், மாதா நகர், ராஜபாளையம், சிலுவைபட்டி, ஆனந்தமாடன் பச்சேரி, உப்பள பகுதி, முத்தையார் காலனி, அ.குமாரபுரம், மேலமருதூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், நிர்வாக காரணங்களால், இன்று (24 ஆம் தேதி) புதன்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த மின்தடையானது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், தேதி பின்னர் அறிவிக்கப்படும். எனவே இன்று இப்பகுதிகளில் மின்தடை செய்யப்படாது என நகர செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.