• vilasalnews@gmail.com

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு அடிப்படை மருத்துவம் சார்ந்த பயிற்சிகள்

  • Share on

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு, வேலைவாய்ப்புடன் கூடிய அடிப்படை மருத்துவம் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இப்பயிற்சிகள் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்தவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.

இப்பயிற்சிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் 18 முதல் 35 வயது வரையில் இருக்க வேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பயிற்சியின் காலம் 6 மாதங்கள்.

இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு ஆரம்பகால மாதாந்திர ஊதியமாக ரூ.12,000/- முதல் ரூ.20,000/- வரை வழங்கப்படும். பின்னர் திறமைக்கு தகுந்தவாறு பதவி உயர்வின் அடிப்படையில் ஊதிய உயர்வும் வழங்கப்படும்.

இப்பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ மூலம் வழங்கப்படும். இப்பயிற்சியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் (www.tahdco.com) என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்

வழங்கப்படும் பயிற்சிகள்:

  • அடிப்படை ஆயுர்வேத மசாஜ்
  • அடிப்படை டயாலிசிஸ் தொழில்நுட்ப வல்லுநர்
  • அடிப்படை அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்
  • அடிப்படை மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்
  • அடிப்படை செவிலியர்
  • அடிப்படை பஞ்சகர்மா தொழில்நுட்ப வல்லுநர்
  • அடிப்படை மூத்த பராமரிப்பு
  • அடிப்படை எக்ஸ்ரே தொழில்நுட்ப வல்லுநர்
  • அடிப்படை யோகா மற்றும் ஆரோக்கிய பயிற்சி

இப்பயிற்சிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், அவர்களின் திறமைகளை வளர்ப்பதற்கும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Share on

தூத்துக்குடி அருகே ஒருவர் வெட்டிக் கொலை - தந்தை;மகன் கைது!

தூத்துக்குடியில் நாளை (24 ஆம் தேதி) புதன்கிழமை மின்தடை... இதுல உங்க ஏரியா இருக்கா?

  • Share on