• vilasalnews@gmail.com

தூத்துக்குடி அருகே ஒருவர் வெட்டிக் கொலை - தந்தை;மகன் கைது!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம், சேர்வைகாரன் மடத்தில் கோழி மேய்ந்ததில் ஏற்பட்ட தகராறில் விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்ட அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : 

தூத்துக்குடி மாவட்டம், சேர்வைகாரன்மடம் கீழத்தெருவை சேர்ந்தவர் தங்கமணி மகன் சம்பத்செல்வகுமார்(60). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் ராமசாமி மகன் ஜெயபாண்டி(60). சம்பத்செல்வகுமாருக்கு சொந்தமான காலி இடத்தில் ஜெயபாண்டிக்கு சொந்தமான கோழிகள் மேய்ந்துள்ளது. அது குறித்து இன்று சம்பத்செல்வகுமார், ஜெயபாண்டி ஆகிய இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

அப்போது ஆத்திரமடைந்த சம்பத்செல்வகுமார் தான் வைத்திருந்த கத்தியால் ஜெயபாண்டியை முதலில் வெட்டியிருக்கிறார். அதில் ஜெயபாண்டியின் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனை பார்த்த ஜெயபாண்டியின் மகன் மாரிச்செல்வம்(36) அரிவாளால் வெட்டியதில் சம்பத்செல்வகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார். 

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த சாயர்புரம் போலீசார், சம்பத்செல்வகுமாரின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

  • Share on

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு அடிப்படை மருத்துவம் சார்ந்த பயிற்சிகள்

  • Share on