• vilasalnews@gmail.com

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

  • Share on

தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற இயக்குனர் குழு கூட்டத்தில் 2023-24 மூன்றாவது காலாண்டு நிதிநிலை தணிக்கை செய்யப்படாத முடிவுகள் இறுதி செய்யப்பட்டது. வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் தணிக்கை செய்யப்படாத மூன்றாவது காலாண்டு நிதிநிலை அறிக்கையினை வெளியிட்டார். 

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

  • நிகர இலாபம் ரூ.284 கோடியாக உயர்ந்துள்ளது.
  • நிகர வட்டி வருமானம் ரூ.537 கோடியாக உயர்ந்துள்ளது.
  • மொத்த வணிகம் ரூ.85,185 கோடியாக உயர்ந்துள்ளது.
  • வைப்புத்தொகை ரூ.46,799 கோடியாக உயர்ந்துள்ளது.
  • கடன் தொகை ரூ.38,386 கோடியாக உயர்ந்துள்ளது.
  • முன்னுரிமைத் துறைகளுக்கு வழங்கப்பட்ட கடன்கள் ரூ.28,725 கோடியாக உயர்ந்துள்ளது.
  • விவசாயத் துறைக்கு வழங்கப்பட்ட கடன்கள் ரூ.13,338 கோடியாக உயர்ந்துள்ளது.
  • MSME துறைகளுக்கு வழங்கப்பட்ட கடன்கள் ரூ.13,064 கோடியாக உயர்ந்துள்ளது.
  • CASA ஆனது ரூ.13,865 கோடியாக உயர்ந்துள்ளது.

நிதிநிலை அறிக்கையைப் பொறுத்தவரை, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பது தெளிவாகிறது. நிகர இலாபம், நிகர வட்டி வருமானம், மொத்த வணிகம், வைப்புத்தொகை மற்றும் கடன் தொகை ஆகிய அனைத்தும் வளர்ச்சியடைந்துள்ளன. குறிப்பாக, முன்னுரிமைத் துறைகளுக்கு வழங்கப்பட்ட கடன்கள் பாரத ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள இலக்கை விட அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், வங்கி தனது வளர்ச்சியை மேலும் மேம்படுத்தவும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் திட்டமிட்டுள்ளது. அதற்காக, புதிய கிளைகள் துவக்குவது, புதிய வங்கி திட்டங்களை அறிமுகப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிதி நிலை தனிக்கை அதிகாரி பி.கே. கிருஷ்ணன், பொது மேலாளர்கள் ரமேஷ், சூரிய ராஜ், இன்பமணி, சுந்தரேசன், ஜெயராம், உதவி பொது மேலாளர்கள் அசோக் குமார், பார்ததசாரதி, தலைமை நிர்வாக அதிகாரி ராஜா மற்றும் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

  • Share on

தஞ்சாவூர் அருகே கார் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கல்

தூத்துக்குடி அருகே ஒருவர் வெட்டிக் கொலை - தந்தை;மகன் கைது!

  • Share on