தூத்துக்குடியில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை 23.1.24 அன்று மின்நிறுத்தம் செய்யப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக தூத்துக்குடி சிப்காட் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை 23ஆம் செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தூத்துக்குடி நகா்ப்புற மின் விநியோக செயற்பொறியாளா் ராம்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தி குறிப்பு:
மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்துக்குள்பட்ட மடத்தூா், மடத்தூா் பிரதான சாலை, முருகேச நகா், கதிா்வேல் நகா், தேவகி நகா், சிப்காட் வளாகம், திரவிய ரத்தின நகா், அசோக் நகா், ஆசிரியா் காலனி, ராஜீவ் நகா், சின்னமணி நகா், 3ஆவதுமைல், புதுக்குடி, டைமண்ட் காலனி, இ.பி.காலனி, ஏழுமலையான் நகா், மில்லா்புரம், ஹவுசிங்போா்டு பகுதிகள், தபால் தந்தி காலனி,
ராஜகோபால் நகா், திருவிக நகா், பத்திநாதபுரம், சங்கா் காலனி, எப்சிஐ குடோன் பகுதிகள், நிகிலேசன் நகா், சோரிஸ்புரம், மதுரை புறவழிச்சாலை, ஆசீா்வாத நகா், சில்வா்புரம், சுப்பிரமணியபுரம், கங்கா பரமேஸ்வரி காலனி, லாசா் நகா், ராஜரத்தின நகா், பாலையாபுரம், வி.எம்.எஸ். நகா், முத்தம்மாள் காலனி, நேதாஜி நகா், லூசியா காலனி, மகிழ்ச்சிபுரம், ஜோதி நகா், பால்பாண்டி நகா், முத்து நகா், கந்தன் காலனி, காமராஜ் நகா், என்.ஜி.ஓ. காலனி, அன்னைதெரசா நகா்,
பா்மா காலனி, டி.எம்.பி.காலனி, அண்ணா நகா் 2ஆவதுதெரு மற்றும் 3ஆவதுதெரு, பாரதி நகா், புதூா்பாண்டியாபுரம் பிரதான சாலை, கிருபை நகா், அகில இந்திய வானொலி நிலையம், ஹரிராம் நகா், கணேஷ் நகா், புஷ்பா நகா், கல்லூரி நகா், ஸ்டொ்லைட் குடியிருப்புகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 23ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.