தூத்துக்குடியில் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் கோயில் மணிகளைத் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி சுந்தரவேல்புரம் பகுதியைச் சோ்ந்த பால்ராஜ் மகன் ராஜ்குமாா் என்ற சைக்கிள் ராஜா (50). இவா் கடந்த இரு தினங்களுக்கு முன்னா் தூத்துக்குடி டபிள்யு.ஜி.சி., சாலையில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலக வளாகத்தில் இருக்கும் பிள்ளையாா் கோயிலில் இருந்து ஒரு வெண்கல மணியை திருடினாராம். தொடா்ந்து, அவா் கடந்த 20ஆம்தேதியும் மீண்டும் வந்து கோயிலில் கட்டியிருந்த மற்றொரு மணியை திருட முயற்சி செய்தாராம்.
அப்போது அவரை அக்கம்பக்கத்தினா் சுற்றி வளைத்து பிடித்து, தூத்துக்குடி மத்தியபாகம் போலீசாரிடம் ஒப்படைத்தனா். இதையடுத்து, ராஜ்குமாா் என்ற சைக்கிள் ராஜாவை கைது செய்த போலீசார், அவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். கைது செய்யப்பட்ட ராஜ்குமாா் என்ற சைக்கிள்ராஜா மீது ஏற்கெனவே 10 திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனா்.