தூத்துக்குடி அருகே பைக் மோதி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். பைக்கை ஓட்டிவந்த வாலிபர் படுகாயம் அடைந்தார்.
தூத்துக்குடி அருகேயுள்ள தெய்வச்செயல் புரம் மேலத் தெருவைச் சேர்ந்தவர் சீனி மனைவி சொர்ணம் (73), இவர் நேற்று தூத்துக்குடி - திருநெல்வேலி ரோட்டில் நடந்து சென்றபோது அவ்வழியே சென்ற பைக் அவர் மீது மோதியது. இதில் சொர்ணம் மற்றும் பைக்கை ஓட்டிவந்த திருநெல்வேலி ஜான்சி ராணி தெருவை சேர்ந்த முருகன் மகன் முத்துக்குமார் (29) ஆகிய இருவரும் காயம் அடைந்தனர்.
இதையடுத்து இருவரும் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், சொர்ணம் பரிதாபமாக இறந்தார். முத்துக்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் வின்சென்ட் அன்பரசி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.