திமுக தலைவர் என்ன முடிவு எடுக்கிறோரோ அதைப் பொறுத்து தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது குறித்து தெரியும் என்று கனிமொழி எம்பி கூறினார்.
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட மீனவர்களுக்குப் பாராட்டு விழா இன்று தூத்துக்குடியில் உள்ள மாணிக்கம் மஹாலில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தலைமை தாங்கி, வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுப்பட்ட 850 மீனவர்களுக்குப் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு தொகுப்பு வழங்கி வாழ்த்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கருத்தை யார் வேண்டுமென்றால் தெரிவிக்கலாம் தவறு இல்லை, அது எவ்வளவு காட்டமாக கருத்தாக இருந்தாலும் முன்வைக்கலாம். அது அரசியலில் ஒரு சாதாரண விஷயம். அடிப்படை நாகரிகம் தாண்டி செல்லக்கூடாது என்பதைத்தான் நான் நினைக்கிறேன். மேலும், டெல்லியில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்றும், திமுக தலைவர் என்ன முடிவு எடுக்கிறோரோ அதைப் பொறுத்து தான் தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது குறித்து தெரியும் என்று கூறினார்.
வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடியில் கனிமொழி எம்பி மீண்டும் போட்டியிடப்போவதில்லை. அவர் தென்சென்னையில் போட்டியிடக்கூடும் என என்றெல்லாம் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் உலா வந்துக்கொண்டு இருக்கக்கூடிய சூழலில், அது தொடர்பாக இன்று கனிமொழி எம்பி தெரிவிரித்திருக்கும் பதில் முக்கியதுவம் வாய்ந்ததாக பார்க்கப்படுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.