• vilasalnews@gmail.com

10ம் வகுப்பு பாஸோ ஃபெயிலோ வேலை இருக்கு... ஆனால், சென்னையில்தான் வேலை!

  • Share on

சென்னையில் ஊர்க்காவல் படையில் சேர ஜனவரி 22 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

சென்னை பெருநகர ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

சென்னை பெருநகர ஊர்க்காவல்படையில் சேர விருப்பமுடைய ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கீழ்காணும் தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை பெருநகர ஊர்க்காவல்படையில் சேர விரும்புவோர் 18 வயது முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தவறியவர்கள்

குற்றப்பின்னணி இல்லாத நன்னடத்தை உள்ளவர்களாக இருக்க வேண்டும்


சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்

குடும்ப அட்டை (Ration Card) வைத்திருக்க வேண்டும்


தேர்ச்சி செய்யப்படும் ஊர்க்காவல்படையினர்களுக்கு 45 நாட்கள் தினசரி 1மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும், பயிற்சி முடித்த பின்னர் அவரவர் வசிக்கும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கு பணிபுரிய அனுப்பப்படுவர்.


சீருடை, தொப்பி, காலணி ஆகியவை வழங்கப்படும். இரவு ரோந்து பணி, பகல் ரோந்து பணி மற்றும் போக்குவரத்து பணிக்கு ரூ.560/-ம் சிறப்பு படியாக வழங்கப்படும்/பெண்களுக்கு பகல்

ரோந்து பணி மட்டுமே.


சிறப்பாக மெச்சத்தகுந்த வகையில் பணிபுரிவோருக்கு தமிழக முதல்வர் பதக்கம் மற்றும் ஜனாதிபதி பதக்கம் ஆகியவை தகுதி அடிப்படையின் கீழ் வழங்கப்படும்.


மேற்கண்ட தகுதியுடையவர்கள் விண்ணப்பங்களை கீழ்காணும் முகவரியில் 22.01.2024 முதல் இலவசமாக பெற்று பூர்த்தி செய்து 10.02.2024 மாலை 05.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பலாம்.


முகவரி : சென்னை பெருநகர ஊர்க்காவல்படை தலைமை அலுவலகம், சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகம், சைதாப்பேட்டை, சென்னை - 15. தொடர்பு எண்: 9498135190, 9566776222. சேவை மனம் கொண்ட யாவரும் ஊர்க்காவல்படையில் சேர்ந்து மக்களுக்கு தொண்டு செய்யலாம் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


ஊர்க்காவல் படை என்பது இந்தியக் காவல் துறைக்கு துணையாக செயல்படும் தன்னார்வ படையாகும்.

  • Share on

தூத்துக்குடியில் இருந்து வேளாங்கண்ணி சென்ற கார் விபத்து : 4 பேர் பலி; 7 பேர் படுகாயம்

வேளாங்கண்ணிக்கு சென்ற போது சோகம் - தூத்துக்குடியை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு... நடந்தது என்ன?

  • Share on