• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் இருந்து வேளாங்கண்ணி சென்ற கார் விபத்து : 4 பேர் பலி; 7 பேர் படுகாயம்

  • Share on

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பக்கவாட்டு சுவரில் மோதி கார் விபத்து. காரில் பயணம் செய்த நான்கு பேர் உயிரிழப்பு. ஏழு பேர் படுகாயம்.


தூத்துக்குடி, 3 வது மைல் பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று இரவு வேளாங்கண்ணி செல்வதற்காக காரில் 11 பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மனோரா கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் சாலையோரம் இருந்த பக்கவாட்டுசுவரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் மோதி விபத்துக்குள்ளானது .


இதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது இருவர் உயிரிழந்துள்னர். மேலும் படுகாயம் அடைந்த ஏழு பேர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 


இந்த விபத்தில் சின்னபாண்டி (35), பாக்கியராஜ் (60), ஞானம்மாள் (60), ராணி (40) இறந்த நால்வரின் உடல் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

வெவ்வேறு சம்பவங்களில் இரு பெண்கள் மாயம்

10ம் வகுப்பு பாஸோ ஃபெயிலோ வேலை இருக்கு... ஆனால், சென்னையில்தான் வேலை!

  • Share on