தூத்துக்குடி செல்சீனி காலனியைச் சேர்ந்தவர் ஜெயசித்ரா (21). தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.
இந்தநிலையில், கடந்த 17ஆம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை. இது சம்பந்தமாக அவரது தாயார் மூக்கம்மாள் மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனையடுத்து, இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்.
அதே போல, தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்தவர் திருமணி தங்கம்(37) கடந்த மூன்று ஆண்டுகளாக கணவரைப் பிரிந்து மகனுடன் வாழ்ந்து வந்தார். மனநிலை பாதிப்பில் இருந்த திருமணி தங்கம், கடந்த 14ஆம் தேதி வீட்டில் இருந்து சென்றார். நேற்று வரை வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாய் சரஸ்வதி சிப்காட் போலீசில் புகார் கொடுத்தார். இது தொடார்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.