ஓட்டப்பிடாரம் அருகே பாஞ்சாலங்குறிச்சியில் குழந்தையுடன் பெண்ணை காணவில்லை என போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் சந்ததியர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த பால்சாமி மகன் அய்யாசாமி ( 34 ) . இவரது மனைவி சக்தி மாயா ( 27 ). இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், சக்தி மாயாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் கடந்த ஜனவரி 18ஆம் தேதி அன்று காலை 8 மணி அளவில் குறுக்குச்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்வதாக கணவர் அய்யாச்சாமி இடம் கூறிவிட்டு குழந்தையுடன் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் மனைவி மற்றும் குழந்தைகள் வீடு திரும்பாததால், அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தும் கிடைக்காததால் அய்யாசாமி ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.